சீனாவுடன் தொடர்புடைய 2,500 ‘யூடியூப் சேனல்கள்: களையெடுக்கும் கூகுள்

Google says it has deleted more than 2,500 YouTube channels tied to China as part of its effort to weed out disinformation on the videosharing platform.

0
415

தவறான தகவல்களைப் பரப்பி போலி பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, சீனாவுடன் தொடர்புடைய 2,500 க்கும் மேற்பட்ட ‘யூடியூப் சேனல்’களை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கூகுள் நிறுவனத்தின் ‘வீடியோ’ பகிர்வு தளம் தான் யூடியூப். இந்தத் தளத்தில், சீனாவுக்கு ஆதரவாக பொய்யான தகவல்கள் அடங்கிய வீடியோக்கள் பரப்பப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்தது கூகுள் நிர்வாகம்.

இதையடுத்து அவற்றைக் களையெடுக்கும் நடவடிக்கையை கூகுள் தொடங்கியுள்ளது.

இதுகுறித்த காலாண்டு அறிக்கையில், கடந்த ஏப்ரல் – ஜூன் மாதங்களுக்கு இடையில் சீனாவுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 2500 யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டிருப்பதாகக் கூகுள் தெரிவித்துள்ளது. இந்த யூடியூப் சேனல்கள் பொய்யான தகவல்களை அரசியல் சார்ந்து பரப்பியதாகக் கூறியுள்ளது கூகுள்.

நீக்கப்பட்ட 2,500 சேனல்கள் குறித்த அடையாளத்தை கூகுள் வெளியிடாத நிலையில் சமூக ஊடக பகுப்பாய்வு நிறுவனமான கிராபிகாவால், தவறான பிரசாரத்துடன் தொடர்புடைய சேனல்களைத் தான் கூகுள் நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் எவ்வித கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் தவறான தகவல்களை பரப்புவதாக கூறப்படும் குற்றச்சாட்டை சீனா ஏற்கனவே மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

‘கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ரஷ்யாவுடன் தொடர்பில் உள்ள நடிகர்கள், அமெரிக்க அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் மக்கள் மனதை மாற்றும் தன்மையிலும் நூற்றுக்கணக்கான தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக புகார் கூறப்பட்டது.

அதே போல் மீண்டும் நடைபெறாமல் இருக்க, கடந்த 4 ஆண்டுகளாக கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் பிரச்சாரத்தை எதிர்கொள்வது தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறு அப்டேட்களை அளித்துவருகின்றன  என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)


பிறந்த நாளா? திருமண நாளா? வெற்றி விழாவா? சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள்.


Dunzo is the one and only 24 x 7 delivery app


GERD : Acid Reflux Symptoms Explained By Dr. J.S. Rajkumar, Lifeline Hospitals


Worried about surgery? Just watch this:


தொழில்நுட்பம்

இலக்கியம்