சீனாவில் 3 நாளில் 100 கோடி வசூலித்த இந்தி மீடியம்

0
398

சீனாவில் இந்திப் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 3 இடியட்ஸ், பிகே, தங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என அமீர் கானின் படங்கள் சீனாவில் அதிகம் வசூலித்ததால் இது இந்தியப் படங்களுக்கான வரவேற்பா இல்லை அமீர் கான் படங்களுக்கான வரவேற்பா என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் வெளியானது.

தங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார் அளவுக்கு வசூலிக்கவில்லை எனினும் பஜ்ரங்கி பைஜான் 100 கோடிகளை சீனா பாக்ஸ் ஆபிஸில் கடந்து நம்பிக்கை தந்தது. இந்நிலையில் மற்றொரு இந்திப் படமும் சீனாவில் முதல் 3 தினங்களில் 100 கோடிகளைக் கடந்து நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது.

இந்தி மீடியம் 19 மே 2017 இல் வெளியானது. இர்பான் கான் நடித்திருந்தார். கொள்ளையடிக்கும் மாடர்ன் ஸ்கூல்களைப் பற்றிய படம் இது. சுமார் 23 கோடிகளில் தயாரான படம் உலகம் முழுவதும் 250 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. இந்நிலையில் ஏப்ரல் 4 2018 சீனாவில் இந்தி மீடீயம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் 100 கோடிகளைக் கடந்த படம் முதல் ஐந்து தினங்களில் 138.27 கோடிகளை வசூலித்துள்ளது. நாள்வாரியாக இந்தி மீடியத்தின் சீன வசூல்…

நாள் 1 – 3.42 மில்லியன் யுஎஸ் டாலர்கள்

நாள் 2 – 6.29 மில்லியன் யுஎஸ் டாலர்கள்

நாள் 3 – 6.05 மில்லியன் யுஎஸ் டாலர்கள்

நாள் 4 – 3.82 மில்லியன் யுஎஸ் டாலர்கள்

நாள் 5 – 1.73 மில்லியன் யுஎஸ் டாலர்கள்

மொத்தம் – 21.31 மில்லியன் யுஎஸ் டாலர்கள் (ரூபாயில் சுமார் 138.27 கோடிகள்)

இந்தி மீடியம் சீனாவில் 250 கோடிகளை கடந்து வசூலிக்கும் என நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ’உன்னைப் பாதுகாக்க முடியவில்லை… மன்னித்துவிடு அசிஃபா’

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்