சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை விஜய்யின் மெர்சல் படம் பெற்றுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான படம் மெர்சல். பலவீனமான கதை, திரைக்கதையில் வெளியான படம், மத்திய அரசை சீண்டும் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த ஒருவரி விமர்சனத்தால் இந்திய அளவில் கவனம் பெற்றது. விஜய் படங்களிலேயே அதிக வசூலையும் அள்ளியது.

மெர்சல் விரைவில் சீனாவில் வெளியாகயிருப்பதாக ஏபி இன்டர்நேஷனல் நிறுவனமும், தேனாண்டாள் ஸ்டுடியோஸின் சிஇஓ ஹேமா ருக்மணியும் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் வெளிநாட்டு படங்களை திரையிட கட்டுப்பாடுகள் உள்ளது. வருடத்துக்கு இத்தனை படங்கள்தான் அனுமதிக்க வேண்டும் என சீன அரசு விதிமுறை வகுத்துள்ளது. பெரும்பாலும் ஹாலிவுட் படங்களே அங்கு வெளியாகும். விதிவிலக்காக அமீர் கானின் இந்திப் படங்களும் வெளியாக ஆரம்பித்தன. பிகே, தங்கல் திரைப்படங்கள் அபிரிதமான வசூலை சீனாவில் பெற்றன. அதனைத் தொடர்ந்து சல்மான், அக்ஷய் படங்களும் வெளியாகின. நல்ல வசூலை பெற்றன.

ஷங்கர் தனது எந்திரன் படத்தை சீனாவில் வெளியிட முயற்சி செய்தார், முடியவில்லை. அதேபோல் ரஜினியின் கபாலி, காலா படங்களுக்கு எடுத்துக் கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. தென்னிந்தியாவிலிருந்து பாகுபலி, பாகுபலி 2 என இரு படங்களே சீனாவில் வெளியாகியுள்ளன. ஆனால், இரண்டும் அதிக வசூலை பெற தவறிவிட்டன.

இந்நிலையில் முதல் தமிழ்ப் படமாக மெர்சல் வெளியாகிறது. சீன ரசிகர்களை படம் கவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

#Mersal, #Vijay, #Samantha, #KajalAgarwall, #NithyaMenon, #ARRahman, #Atlee

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்