இது உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலமான திகழும் எனக் கூறப்படுகிறது

அக்டோபர் 24 முதல் இந்தப் பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்
ZHUHAI, CHINA: சீன அதிபர் ஜி ஜின்பிங் சீனா மெகா பாலத்தை ஜகாயில் திறந்து வைத்துள்ளார். இது உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலமான திகழும் எனக் கூறப்படுகிறது.
news 1.002
ஹாங்காங் மற்றும் மெயின்லேண்டு சீனாவை இப்பாலம் இணைக்கிறது. 
ஜி, இவ்விழாவிற்க்கு நேரில் வந்த்து தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் இப்பாலம் ‘’ அற்புதமாக” உள்ளதாகவும் கூறினார்.

இந்த 55 கிலோமீட்டர் (34 மைல்) பாலமானது சாலைமார்க பாலமாகவும் , கடல் நீருக்கடியில் சுரங்கபாதை வழியாக ஹாங்காவில் உள்ள லான்டாவ தீவையும் ஜகாய்யையும் கடந்து செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இது ஹாங்காங் மற்றும் மெயின்லேண்டு சீனாவில் உள்ள இரண்டாவது பெறும் கட்டுமானமாகும். இந்தப் பாலத்திற்கு மேல், அதிவேக ரயில் தடம் போடப்படும் என்றும் கூறப்படுகிறது.

news 1.003
வரும் புதன் கிழமை முதல், இந்தப் பாலத்தில், சாலை போக்குவரத்து திறக்கபடுகிறது. 2009ல், இந்தப் பாலத்துக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கப்பட்டது. ஆனால், பல்வேறு விதமான பிரச்னைகளுக்கு உள்ளானதால், இப்போது தான் வேலை முடிவடைந்துள்ளது.
news 1.004
இந்தப் பாலம், கட்டுமானத்தின் முன்னோடியாகவும், நேரத்தை குறைக்கும் திட்டமாகவும் கருதப்படுகிறது. ஆனால் பலரோ இது தேவையற்றத் திட்டம் என்றும் கருத்து கூறி வருகின்றனர்.
 
‘’ எங்களது வரிபணத்தில் கட்டபட்ட இப்பாலத்தில் எங்களுக்கே செல்ல உரிமையில்லை” என்று தென் சீன பத்திரிக்கையின் இணையப் பதிவில் கூறப்பட்டுள்ளது.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here