சீனாவிலிருந்து 3 பத்திரிகையாளர்கள் வெளியேற்ற கெடு

China is expelling three Wall Street Journal (WSJ) reporters from the country, a move with no recent precedent, marking a sharp escalation in pressure on foreign media in the country.

0
182

 ‘ஆசியாவின் உண்மை நோயாளி சீனா’ என்ற செய்தியை வெளியிட்ட, ஜோஷ் ஷின், ச்சாவ் டெங், மற்றும் பிலிப் வென் என்ற மூன்று பத்திரிகையாளர்களை, சீனாவிலிருந்து வெளியேற ஐந்து நாள்கள் கெடு விதித்திருக்கிறது, சீன அரசு.

கடந்த 3 ஆம் தேதி, ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ என்ற நாளிதழின் முதல் பக்கத்தில், சீனாவில் ஏற்பட்டிருக்கும் கோவைட்-19(கொரோனா வைரஸ்) தொற்று குறித்து,  ‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என்று தலைப்பிட்ட செய்தி வெளியானது. அந்தச் செய்தியில், சீனா கடும் பொருளாதாரம் வீழ்ச்சியில் சிக்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து கடந்த 19 ஆம் தேதி  சீன அரசு இது குறித்துவெளியிட்ட அறிக்கையில், ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் அவதூறு பரப்பும் வகையில், செய்தி வெளியிட்டுள்ளது. அந்தத் தவற்றைச் சரிசெய்துகொள்ள வேண்டும். அந்தச் செய்தியை வெளியிட்டதில் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாளிதழின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என வலியுறுத்தப்பட்டிருந்தது. சீனாவின் இந்த அறிக்கையை, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட அந்த நாளிதழ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில், சீனாவின் வெளிவிவகார அமைச்சக செயலர் ஜெங் சுவாங், ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சீன அரசின் உத்தரவை மதிக்கவில்லை. சர்ச்சைக்குரிய செய்தியில் தொடர்புடைய, பீஜிங்கைச் சேர்ந்த, ஜோஷ் ஷின், ச்சாவ் டெங், மற்றும் பிலிப் வென் ஆகியோர் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மூவரும் சீனாவிலிருந்து வெளியேற ஐந்து நாள்கள் கெடு விதிக்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக,சீனாவின் வுஹான் நகரில் உள்ள உண்மை நிலையை வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்ட சீன பத்திரிகையாளர் மாயமாகினர். அதற்கு சீன அரசு கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், மூன்று பத்திரிகையாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றக் கெடு விதித்துள்ளதால், ‘சீனாவில் பத்திரிகையாளர்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது’ என  அனைவரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here