சீனாவின் 5 பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை

These goods are produced in Xinjiang Uyghur Autonomous Region, where the Chinese govt is engaged in systemic human rights abuses, the US said.

0
74

தொழிலாளர்களை பலவந்தப்படுத்தி வேலை வாங்குவதாக கூறி சீனாவில் உற்பத்தி செய்யப்படும்  ஐந்து பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்கர் முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை இனத்தவர் வசிக்கின்றனர். இங்கு, 10 லட்சத்துக்கும் அதிகமான சிறுபான்மையினரை, முகாம்களில் அடைத்து, பொருட்கள் தயாரிப்பில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதாக சீன அரசு மீது மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஆனால், இதற்கு சீன அதிகாரிகள், ‘முகாம்களில், சிறுபான்மையின மாணவர்களின் மத பயங்கரவாத போக்கை மாற்ற பயிற்சி அளித்து, மாண்டரின் மொழி கற்பிக்கப்படுகிறது; கட்டாய பணியில் ஈடுபடுத்தவில்லை’ என கூறினர்.

ஆனால், இதை, அமெரிக்கா உட்பட பல நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘உற்பத்தியை அதிகரிக்க, சீன அரசு, தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குகிறது. ஜின்ஜியாங் மாகாணத்தில் தொழிலாளர்களை பலவந்தப்படுத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது, நவீன அடிமை முறை என அமெரிக்கா விமர்சித்தது.

இந்நிலையில், தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி, சித்ரவதை செய்து, உற்பத்தி செய்யப்படும் சீன பொருட்களை இறக்குமதி செய்வதை தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்டமாக, பருத்தி, தக்காளி, கணினி உபகரணங்கள்உள்ளிட்ட ஐந்து சீன பொருட்களை இறக்குமதி செய்ய அதிபர் டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த தடையின் மூலமாக அமெரிக்க வினியோக சங்கிலிகளில் சட்ட விரோத, மனிதாபிமானமற்ற மற்றும் சுரண்டல் நடைமுறைகளை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்கிற செய்தியை சர்வதேச சமூகத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here