பணமில்லா பரிவர்த்தனையான, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு உலகம் மாறிவருகிறது. இதனால் பிச்சை கேட்பவர்களின் நிலைமை மோசமாகி விட்டது.

இதனால் ஷான்டோங் மாகாணத்தில் உள்ள ஜினான் நகரில் இருக்கும் சீன யாசகர்கள் தங்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற்றிக்கொண்டனர்.

சீன பிச்சைக்காரர்கள், தற்போது பிரிண்ட் செய்யப்பட்ட கியூ.ஆர்.கோட், கடன் அட்டைகளைத் தேய்ப்பதற்கான இயந்திரம் போன்றவற்றோடு வலம் வருகிறார்கள். பணம் இருப்பவர்களிடம் பணமாகவும், இல்லாதவர்களிடம் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்துகொள்ளச் சொல்கிறார்கள்.

கியூ.ஆர்.கோட் மூலம் யாசகர்கள் சீனாவின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள், பெய்ஜிங் உட்பட பல நகரங்களில் அதிக அளவில் வருமானம் பெறுகிறார்கள் என்று தெரிய வருகிறது. இந்த டிஜிட்டல் பிச்சைக்காரர்கள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களில்தான் வெற்றிகரமாகச் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையை செய்து வருகிறார்கள். ஒரு சீன பிச்சைக்காரர் மாதத்துக்கு சுமார் 44 ஆயிரம் ரூபாய் வரை இந்த இடங்களில் சம்பாதித்து கொள்கிறாராம்.

அமெரிக்காவை விட சீனா 50 மடங்கு அதிகமாக டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஈடுபட்டுவருவதாகப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்