சீனாவின் கொரோனா தடுப்பூசி: மிகக்குறைந்த செயல்திறன் கொண்டது: பிரேசில் ஆய்வாளர்கள் தகவல்

Officials at the Butantan Institute in São Paulo said on Tuesday that a trial conducted in Brazil showed that the CoronaVac vaccine, made by the Beijing-based company Sinovac, had an efficacy rate just over 50 percent.

0
67

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி, அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நல்ல பயன் தருகிறது. இந்த தடுப்பூசிகளின் செயல்திறன் 90 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளது.

இந்நிலையில், சீனாவின் சினோவாக் பயோடெக் உருவாக்கிய ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசி, பிரேசிலில், வெறும் 50.4% மட்டுமே பயனுள்ளதாக இருந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவும் சினோவக் என்ற பெயரில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி 90 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என சீன நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து, சீனாவின் சினோவக் நிறுவன கொரோனா தடுப்பூசியை பிரேசில் நாடு வாங்கியது.

இதையடுத்து, இந்த சினோவக் தடுப்பூசியை தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் நடைமுறைகள் பிரேசில் நடைபெற்றது. சமீபத்தில் நடைபெற்ற பரிசோதனையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த பரிசோதனை முடிவுகளின் படி சீனாவின் சினோவக் தடுப்பூசி 50.4 சதவிகிதம் செயல்திறன் கொண்டது எனத் தெரியவந்துள்ளது. மாடர்னா, பைசர், ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகளை ஒப்பிடும் போது சீனாவின் தடுப்பூசி மிகவும் குறைவான செயல்திறன் கொண்டதாக உள்ளது.

சினோவாக் மருந்து சோதனைகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு முடிவுகளை அளித்துள்ளன. கடந்த மாதம் துருக்கிய ஆராய்ச்சியாளர்கள் சினோவாக் தடுப்பூசி 91.25% பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தனர். புதன்கிழமை முதல் தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்தோனேசியா. அங்குசினோவாக் மருந்து, 65.3% பயனுள்ளதாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இவை இரண்டுமே இடைக்கால முடிவுகள்தான்

சீனாவின் சினோவக் அங்கீகரிக்கக்கூடிய செயல்திறனை கூட இல்லாமல்இருப்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைவானசெயல்திறன் காரணமாக சீன தடுப்பூசியால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here