நடிகை சுஜா வருணியும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரும் கடந்த பதினொரு வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

சுஜா வருணி சின்ன வயதிலிருந்தே நடித்து வருகிறார். சசிகுமாரின் கிடாரி படத்தில் நடித்தவர், வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் ஆண் தேவதை படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக மக்கள் அனைவரிடமும் சுஜா வருணியின் பெயர் பிரபலமானது.

இன்று சுஜா வருணியின் பிறந்தநாள். அதனை முன்னிட்டு சிவகுமார், நவம்பர் 19 ஆம் தேதி சுஜா வருணியுடன் திருமணம் நடைபெற இருக்கும் செய்தியை ட்விட்டரில் வெளியிட்டார். அதற்கு பதிலளித்த சுஜா வருணி, வெட்கமாக இருக்கிறது அத்தான் என்று பதிலளித்துள்ளார். திருமணம் நிச்சயமாவதற்கு முன்பிருந்தே ட்விட்டரில் சிவகுமாரை சுஜா வருணி அத்தான் என்றே குறிப்பிட்டு வந்தார்.

சென்னையில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்