1. சிவகார்த்திகேயன் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்ற படத்திலும், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கி வரும் படத்தில் அனு இம்மானுவல் சிவகார்த்திகேயனின் ஜோடியாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது சகோதரியாகவும் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் நட்டி ஐஸ்வர்யா ராஜேஷின் காதலராக வருகிறார். இமான் இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவில் சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. கடைக்குட்டி சிங்கத்தைப் போல் கிராமத்துப் பின்னணியில் இந்தப் படத்தை பாண்டிராஜ் எடுத்து வருகிறார். தற்போது தேனியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

2. பாண்டிராஜ், பி.எஸ்.மித்ரன் படங்களைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். துபாயில் இதன் ஸ்கிரிப்டை எழுதி முடித்துள்ளார் விக்னேஷ் சிவன். 

3. விக்னேஷ் சிவன் படத்தைத் தொடர்ந்து அயோக்யா வெங்கட் மோகன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதுதவிர கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

4. சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் பி.எஸ்.மித்ரனின் ஹீரோ படத்திலும், பாண்டிராஜின் படத்திலும் நடித்து வருகிறhர். இதில் பாண்டிராஜ் படத்தை சன் பிக்சர்ஸும், ஹீரோவை கேஜேஆர் ஸ்டுடியோஸும் தயாரிக்கின்றன. ஹீரோ டிசம்பர் 20 வெளியாகும் என வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளனர். ஆனால், இந்தப் படங்களில் முதலில் பாண்டிராஜ் படமே திரைக்கு வருகிறது. பூஜை விடுமுறையை ஒட்டி படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது. பாண்டிராஜ் 90 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டதால் ஹீரோவுக்கு முன்பே பாண்டிராஜ் படம் திரைக்கு வருவது உறுதி.

5. சிவகார்த்திகேயனின் ஆரம்ப காலத்தில் நடிக்க வாய்ப்புக்காக அலைந்தவர் டி.ராஜா. சிவகார்த்திகேயன் ஸ்டாரானதும் டி.ராஜா 24 ஏஎம் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ரெமோ என்ற படத்தை சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்தார். அதன் பிறகு வேலைக்காரன், சீமராஜா, ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் என சிவகார்த்திகேயனின் அனைத்துப் படங்களையும் ராஜாவே தயாரித்தார். வேலைக்காரன், சீமராஜா படங்கள் ஏற்படுத்திய கடன் சிவகார்த்திகேயனை பாதிக்க சன் பிக்சர்ஸ், கேஜேஆர் ஸ்டுடியோஸ், லைகா என பிற தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கால்ஷீட் தர ஆரம்பித்தார். டி.ராஜா கடன்களிலிருந்து முழுமையாக மீண்ட பிறகே இனி அவரது தயாரிப்பில் நடிப்பது என சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளார்.