தமிழில் விளையாட்டு தொடர்பான திரைப்படங்கள் அதிகம் வெளியாகாத நிலையில் கனா திரைப்படம் அந்த வரிசைக்கு தொடக்கமாய் அமையும் என சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ”உன்னால முடியாதுனு யாராவது சொன்னா நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல உன்ன” என்ற வசனமும், ”இந்த உலகம் ஜெயிச்சிருவேன்னு சொன்னா கேக்காது.ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேட்கும். நீ எது பேசுறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு” போன்ற வசனமும் கனா ட்ரெய்லரில் அதிகம் கவனம் கொள்கின்றன. ஒரு மிகப்பெரிய கனவைத்தாங்கும் ஏழை பெண்ணாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும் எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here