சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் பாரதிராஜா

0
154

சிவகார்த்திகேயன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.

தொடர்ந்து படங்கள் இயக்கிவந்த பாரதிராஜா சமீபகாலங்களில் அதிகம் ஆக்ஷன் கட் சொல்லவில்லை. மாறாக நடிக்க ஆரம்பித்துள்ளார். நெடுநாள்களுக்கு முன் ஆய்தஎழுத்தில் வில்லன் வேடம் பிறகு ரெட்டச்சுழியில் முக்கிய வேடம். அதன் பின் சுசீந்திரனின் பாண்டிய நாடு நல்ல பெயரை சம்பாதித்துதர, தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டினார். தற்போது சுசீந்திரனின் கென்னடி கபடிகிளப் படத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ரவிக்குமார் இயக்கும் படத்திலும், பி.எஸ்.மித்ரனின் ஹீரோ படத்திலும் தற்போது நடித்து வருகிறார். அதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம், லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம். இதில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.இந்தப் படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

அதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம், லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம். இதில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here