சிவகார்த்திகேயனின் படத்துக்கு 25 லட்சம் அபராதம் – தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி

0
81
Sivakarthikeyan & Nayantara

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்க விதிமுறையை மீறி பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரம் தந்தனர். அது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. விளக்கம் கேட்டு படத்தின் தயாரிப்பாளர் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

வேலைக்காரன் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி வாங்கியிருந்தது. ஒருபக்க விளம்பரத்தின் ஒரு ஓரமாக விஜய் டிவியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. படத்தை வாங்கிய விஜய் டிவி வெளியிட்ட விளம்பரத்துக்கு நாங்க எப்படி பொறுப்பாக முடியும் என்று லாஜிக்காக வைத்த கேள்வியை தயாரிப்பாளர்கள் சங்கம் நிராகரித்தது. சமீபத்திய தகவல், வேலைக்காரன் படத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் 25 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கும் இதேபோல் முழுப்பக்க விளம்பரம் தரப்பட்டது. அவர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தீர்மானித்திருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.

பெரிய படங்கள் அதிக விளம்பரம் செய்யும்போது சின்ன படங்கள் பாதிக்கப்படுகின்றன. அதனை கட்டுப்படுத்தவே, எந்தப் படமாக இருந்தாலும் கால்பக்க விளம்பரமே என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடு விதித்திருந்தது. அதனைத்தான் வேலைக்காரன் மீறியிருக்கிறது.

அபராதம் சரியே.

இதையும் படியுங்கள் : ஜக்கி வாசுதேவின் பேச்சில் என்ன பிரச்சினை?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்