சிவகங்கை அருகே ரவுடி கார்த்திகைச் செல்வன் என்பவரை என்கவுண்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். சிவகங்கை மாவட்டம் வயிரவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகைச் செல்வன். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாகவும், மதுரை மற்றும் பிற மாவட்டங்களில் 8 வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது கூட்டாளிகள் சிலருடன் மதுரையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் கொள்ளையடித்து விட்டு, சிவகங்கை அருகே பதுங்கிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அப்போது, கூட்டாளிகளுடன் இருந்த அவர், போலீசாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், கார்த்திகை சாமி உயிரிழந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: விருதுநகர்: அரசுப் பேருந்தில் ஒருவர் சுட்டுக்கொலை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்