சிலை கடத்தல் விவகாரம் – சிக்கலில் இரும்புத்திரை இயக்குநர்…?

0
194

இரும்புத்திரை படத்தில் எப்படி ஹேக்கர் குற்றவாளிகள் பணத்தை அடிக்கிறார்கள் என்பதை நுட்பமாக சித்தரித்திருந்தார் பி.எஸ்.மித்ரன். அந்த டீட்டெயிலிங்குக்காகவே அவரை பாராட்டினார்கள். இப்போது அதுவே அவருக்கு பாதகமாகியிருக்கிறது.

சிலை கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா பி.எஸ்.மித்ரனின் அம்மா. பல கோடிகள் இந்த கடத்தல் விவகாரத்தில் புழங்கியுள்ளது. பெரும்தலைகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. சிலை கடத்தல் வழக்கில் கவிதா சிக்கியதால், ஹேக்கர் விஷயத்தை எப்படி இவ்வளவு கச்சிதமாக காட்சிப்படுத்தினார் என்று பி.எஸ்.மித்ரனை சந்தேகக்கண் கொண்டு பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நல்லவேளை சைபர் க்ரைம் குறித்த படத்தை பி.எஸ்.மித்ரன் எடுத்தார். இதுவே சிலை கடத்தல் குறித்த படமாகயிருந்தால் கேள்வியே கேட்காமல் உள்ளே பிடித்துப் போட்டிருப்பார்கள்.

குற்றங்களை நுட்பமாக சித்தரிப்பதிலும் சிக்கல் இருக்கிறது இயக்குநர்களே.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்