சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்துவிட்டு, அது எப்போது டெலிவரி செய்யப்படும் என்று வாடிக்கையாளர்கள் காத்திருப்பார்கள்.

இதற்கான தீர்வாக சிலிண்டர் புக் செய்யும் போது எந்த நேரத்தில் டெலிவரி செய்ய வெண்டும் என்று தேர்வு செய்யும் புதிய முறையை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் சிலிண்டர் டெலிவரி நேரத்தை வாடிக்கையாளர்களே தேர்வு செய்யலாம். ஆனால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும்.

அதன் படி காலை 8 மணிக்குள் சிலிண்டர் டெலிவரி செய்யப்பட வேண்டும் என்றால் பெரு நகரங்களில் 50 ரூபாயும், புறநகரம் மற்றும் பிற பகுதிகளில் 40 ரூபாயும் டெலிவரி கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இதுவே காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள் சிலிண்டர் டெலிவரி செய்ய வேண்டுமெனில் பெருநகரங்களில் 25 ரூபாயும், புற நகரம் மற்றும் பிற பகுதிகளில் 20 ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் சிலிண்டர் டெலிவரி செய்யப்பட வேண்டும் என்றால் பெரு நகரங்களில் 50 ரூபாயும், புற நகரம் மற்றும் பிற பகுதிகளில் 40 ரூபாயும் டெலிவரி கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் சிலிண்டர் டெலிவரி பெற, பெருநகரங்களில் 25 ரூபாயும், புறநகரம் மற்றும் பிற பகுதிகளில் 20 ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

மேலே கூறிய இந்தக் கட்டணம் விவரம் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மட்டுமே ஆகும். இதற்கான கட்டணங்கள் பிற எண்ணெய் நிறுவனங்களுக்கு மாறுபடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here