சிறை வைக்கப்பட்டிருக்கும் ஷா ஃபைசலையும், அரசியல்வாதிகளையும் உடனே விடுவிக்கவேண்டும் – ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல்

0
346

120-க்கும் மேற்பட்ட ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள், முன்னாள், இன்னாள் மாணவர்கள் , இந்திய அரசு காஷ்மீரில் கைது செய்துள்ள அரசியல்வாதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

120-க்கும் மேற்பட்ட ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள், முன்னாள், இன்னாள் மாணவர்கள்  சமீபத்தில் காஷ்மீரில் பல உள்ளூர் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்தும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது குறித்தும் நாங்கள் கவலை கொண்டிருக்கிறோம் என தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.  ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவரும் அரசியல்வாதியுமான ஷா ஃபைசல் (ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்)  கைது செய்யப்பட்டிருப்பது கவலையளிக்கிறது என அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும், ஷா ஃபைசல் மற்றும் கைதான தலைவர்களை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோருகிறோம்” எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஃபைசல் கைது செய்யப்பட்டார். பின்பு அவரை ஸ்ரீநகரில் தற்காலிக சிறையாக மாற்றப்பட்டுள்ள செண்டவுர் ஹோட்டலில் வைத்துள்ளது அரசு. பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாகவும், காஷ்மீரை யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது அரசு.  கடந்த வாரம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு நடவடிக்கையாக பிரச்சினை செய்வார்கள் என்று குறிப்பிட்டு 20 பேரை  ஆக்ராவில் உள்ள சிறையில் அடைத்தது அரசு.

ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள் மக்களின் ஜனநாயக உரிமைகளை மனதில் வைத்து தக்க நடவடிக்கை எடுங்கள் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.  ஜம்மு காஷ்மீரில் ஸ்திரத்தன்மையை  உறுதி செய்வதுதான் ஜனநாயகம் மற்றும் அமைதி என்பதற்கான பொருளாகும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்  அந்த அறிக்கையில் . 

கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக, காஷ்மீரில் வீட்டுக்கு வீடு இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. கைதான தலைவர்களை விடுவிப்பது குறித்தும் இராணுவ கெடுபிடியை திரும்பப் பெறுதல், துண்டித்த தகவல் தொடர்பை இணைப்பது குறித்தும் அரசு இதுவரை பேசவில்லை. இந்தக் கெடுபிடிகள் எத்தனை நாளுக்கு நீடிக்கும் எனவும் அரசு சொல்ல மறுக்கிறது.

காஷ்மீரில் ஆகஸ்டு 5-ஆம் தேதி முதல் மொபைல் இணைப்பை துண்டிக்கப்பட்டுள்ளது . பொது இடங்களில் மக்கள் கூடுவதையும் தடை செய்தது. காஷ்மீரில் சில பகுதிகளில் அவ்வவ்போது போராட்டங்கள் நடந்தன. ஜம்முவின் சில பகுதிகளில் தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்ட போதும், தீவிர ராணுவ கண்காணிப்பிலேயே இருக்கிறது காஷ்மீர்.  

//scroll.in

thewire.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here