சிறையில் இருந்து 75 கைதிகள் தப்பி ஓட்டம் : அதிகாரிகளை திசை திருப்ப சுரங்கப்பாதை

0
1190

பிரேசில் எல்லையின் கிழக்கு பராகுவே நகரில் உள்ள சிறையில் இருந்து 75 கைதிகள் தப்பியுள்ளனர்.

கைதிகள் சிறை காவலர்கள் உதவியோடு சிறையின் பிரதான வாயில் வழியாகவே தப்பி இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் சிறையின் உள்ளே ஒரு சுரங்கப்பாதை தோண்டப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தப்பிச் சென்ற பாதையை திசை திருப்பவும் இவ்வாறு சுரங்கப்பாதையை தோண்டி இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

110569141-bd3f0f2e-09bc-4cbc-a106-be2f0aa53464

தப்பிச் சென்ற கைதிகள் பிரேசிலின் மிகப்பெரிய கிரிமினல் கும்பல்களை சேர்ந்தவர்கள் என்று பிரேசிலின் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பராகுவே, பொலிவியா மற்றும் கோலம்பியா உள்ளிட்ட இடங்களில் போதைபொருள் கடத்துதல் ஆயுத கடத்தலில் ஈடுபடும் 30,000திற்கும் மேற்பட்ட நபர்கள் பலர் குற்றச்செயல்களில் குழுக்களாக செயல்படுகின்றனர்.

தப்பிய கைதிகள் குறித்து விசாரணை நடத்தியபோது சிறையில் உள்ள அறை ஒன்றில் 200 மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் சுரங்கப்பாதை வழியாக கைதி ஒருவர் தப்பிக்க முயன்றபோது பிடிபட்டதாகவும் கூறப்படுகிறது.

110569142-7a04bc41-c109-4b92-90a7-7ac0731903f9

இந்தச் சிறையை நிர்வகிக்கும் அதிகாரி விடுமுறையில் இருந்ததால், கடந்த சில நாட்களில் சிறிய குழுக்களாக கைதிகளை சிறை கண்காணிப்பாளர்கள் தப்பிக்க வழிவகை செய்திருக்கலாம் என்று அந்நாட்டின் உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன.

இந்த் நிலையில், பிரேசில் மற்றும் பராகுவே நகரை இணைக்கும் சாலைகளில் நிறைய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here