சிறுவர்கள் கூட வெளியில் வர அனுமதியில்லை; நாங்கள் துன்பத்தில் இருக்கிறோம்; ராகுலிடம் அழுத காஷ்மீர் பெண் (viral video)

0
594

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பில் 370 பிரிவை திரும்பப் பெற்றது. மாநிலத்தையும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது.  போராட்டங்கள் நடந்துவிடக்கூடாது என்ற நோக்கில் ஆகஸ்ட்  5-ஆம் தேதி முதல் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது. அன்றைய தினம் முதல் காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. 

காஷ்மீரில் இன்னும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வருவதால், கட்டுபாடுகள் தொடர்ந்து வருகின்றன. முன்னாள் முதல்வர்கள் இன்னும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தொலைபேசி, செல்போன், தொலைக்காட்சி, இன்டர்நேட் சேவை இன்னும் கிடைக்கவில்லை. இருந்தாலும் பல இடங்களின் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் சில ஊடகங்களும் , அரசும் காஷ்மீர் அமைதியாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர். ஆனால் பிபிசி, ராய்ட்டர்ஸ், அசோசியேட்டட் பிரஸ், சிஎன் என் போன்ற வெளிநாட்டு ஊடகங்கள் காஷ்மீரில் நடக்கும் போராட்டங்களை ஒளிபரப்பி வருகின்றனர். 

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக சனிக்கிழமை அந்த மாநிலத்துக்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். 

அவர்கள் ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்த போது, விமானத்தில் இருந்த காஷ்மீரியப் பெண் ஒருவர் ராகுலிடம் வந்து காஷ்மீர் நிலை குறித்துப் பேசியுள்ளார்.

அவர், ‘என்னுடைய குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் உள்ளனர். என்னுடைய சகோதரர் இருதய நோயாளி. கடந்த 10 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை பார்க்க முடியாத சூழல் தான் காஷ்மீரில் நிலவுகிறது. நாங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம்’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். 

காஷ்மீர் அமைதியாக இருக்கிறது என்று இந்திய அரசும், சில இந்திய ஊடகங்களும் கூறி வந்த நிலையில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here