சென்னையைச் சேர்ந்த சிறுமி ஹாசினி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், வரும் 19ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரியில், சென்னை போரூர் அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், வசித்து வந்த பாபு என்பவரின் மகளான ஹாசினி என்கிற சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற வழக்கில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதனையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் செலவுக்கு பணம் தராத காரணத்தினால் தனது தாயையும் கொன்று விட்டு மும்பைக்குத் தப்பிவிட்டார். இதனையடுத்து சென்னை போலீசார் தனிப்படை அமைத்து தஷ்வந்த்தைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

பிப்.19ஆம் தேதி தீர்ப்பு

சிறுமி ஹாசினி கொலை வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை, இரு தரப்பு வாதங்கள் நிறைவுபெற்றதையடுத்து, வரும் 19ஆம் தேதி (திங்கட்கிழமை) தீர்ப்பு அளிக்கப்படும் என செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்