சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் மீதான குற்றங்கள் நிரூபணமாகியுள்ளதால் அவரைக் குற்றவாளி என அறிவித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த பிப்ரவரியில், சென்னை போரூர் அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், வசித்து வந்த பாபு என்பவரின் மகளான ஹாசினி என்கிற சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற வழக்கில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதனையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் செலவுக்கு பணம் தராத காரணத்தினால் தனது தாயையும் கொன்று விட்டு மும்பைக்குத் தப்பிவிட்டார். இதனையடுத்து சென்னை போலீசார் தனிப்படை அமைத்து தஷ்வந்த்தைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

குற்றாவளி என அறிவிப்பு

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் திங்கட்கிழமை (இன்று) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளதால் அவரைக் குற்றவாளி என செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here