சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறைகளை மோடி அரசு கண்டித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் – இந்தியாவிடம் கூறிய அமெரிக்கா

India Should Condemn Attacks on Minorities, U.S. Diplomat Says

0
316
Modi

பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய  சமூகங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அமெரிக்கா இந்தியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தும் என்று அமெரிக்கா வெள்ளை மாளிகை அதிகாரி கூறியுள்ளார். 

 இரண்டாவது முறை வெற்றி பெற்றிருக்கும் இந்து தேசியவாத அரசு மதம் சார்ந்த வன்முறைகளை கண்டித்து வன்முறையில் ஈடுபடும் தீவிரவாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்கு ஆசியாவின் அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார்.

பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய  சமூகங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அமெரிக்கா இந்தியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தும் என்று அமெரிக்கா வெள்ளை மாளிகையின் , தெற்கு  மற்றும் மத்திய ஆசியாவின் தற்காலிக உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் கூறியுள்ளார்.  

மோடி 2 வது முறையாக பதவியேற்று இன்னமும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில்  ஆசியாவின் வெளியுறவு விவகார துணைக்குழுவிடம் இந்தக் கருத்தை அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார்.  மோடியின் இந்து தேசியவாத பாஜக பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களிடம் தேசியவாதம், மதம், மற்றும் சில நலத்திட்டங்களைக் கூறி இரண்டாவது முறை ஆட்சியை பிடித்திருக்கிறது. மாலேகானில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் குண்டு வெடித்ததில் குற்றவாளியான இந்து சாமியார் பிரக்யா சிங்கை வேட்பாளராக நிறுத்திய பாஜக அவர் குற்றமற்றவர் என்றும் கூறியது. 

இந்தியாவில் தேர்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களும், சுதந்திரமான நிறுவனங்களும் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளைக் கண்டித்து தீவிரவாதிகளை கைது செய்வதை அமெரிக்கா உற்று நோக்கிக் கொண்டிருக்கும் என்று வடக்கு மற்றும் மத்திய ஆசியாவின் தற்காலிக உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் கூறியுள்ளார்.   இது இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதார நலன்களை மேம்படுத்தி இரு நாடுகளுக்கான உறவை வளர்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

பிப்ரவரியில் மனித உரிமைகள் கண்காணிப்பு குழு வெளியிட்ட அறிக்கையில் முஸ்லிம்கள் மீது இந்துத்துவா அமைப்புகள் நடத்தும் வன்முறைகளையும், அந்த வன்முறைகளை நியாப்படுத்தும் பாஜக தலைவர்களையும் குறிப்பிட்டு எழுதியிருந்தது. பாஜக அரசில் மட்டும் இவ்வாறு நடக்கவில்லை காங்கிரஸ் ஆட்சியிலும் இவ்வாறு நடந்திருக்கிறது என்று மோடியின் செய்தியாளர் கூறியுள்ளார். 

நியாயமான, பரஸ்பரமான முறையில் இந்தியாவுடனான எங்களின் வர்த்தக உறவை வளர்துக் கொள்ளவிரும்புகிறோம் என்றும் வடக்கு மற்றும் மத்திய ஆசியாவின் தற்காலிக உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் கூறியுள்ளார்.  

அமெரிக்காவின் முதன்மை செய்லாளர் மைக் பாம்பியோ இந்த மாதம் இந்தியா வரவிருக்கிறார். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here