சிறிய வழிபாட்டுத்தலங்களில் மக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி

0
234

கொரோனா அச்சத்தால் தமிழகத்தில் பொது முடக்கம் வரும் ஜூலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை 5 ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் தொடரும் என்றும் உணவகங்களில் ஜூலை 6 முதல் அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதே போல, மதுரையிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும் ஜூலை 6 ஆம் தேதிக்குப் பிறகு முன்னர் இருந்த படி பொது முடக்கம் நீடிக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, கிராமங்களில் இருக்கும் சிறிய வழிபாட்டுத்தலங்களைத் திறக்க அரசு அனுமதி அளித்தது. அதாவது ரூ.10,000க்கும் குறைவான ஆண்டு வருமானம் இருக்கும் மசூதி, கோயில்கள், தர்காக்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் தற்போது இருக்கும் நடைமுறையே தொடரும் என்றும் மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here