சிறார் ஆபாச பட விவகாரம்: 600 ஐபி முகவரிகளைக் கொண்டு விசாரணை

0
240

காவல்துறை சிறப்பு பிரிவு அதிகாரிகள், சிறார் ஆபாச பட விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் திரட்டப்பட்ட 600 ஐபி முகவரிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணாமல்போன மற்றும் சுயநலத்திற்காக பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கான தேசிய மையம் கொடுத்த தகவலின் அடிப்படையில், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அம்மையம் அளித்த பட்டியலின் அடிப்படையில், சென்னையில் 150க்கும் மேற்பட்ட ஐபி முகவரிகளில் இருந்து சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணை வளையத்திற்குள் கோவையில் 40 பேரும், திருச்சியில் 20 பேரும் கொண்டுவரப்பட்டுள்ளனர். மாவட்டங்கள் வாரியாக பிரிக்கப்பட்ட ஐ.பி முகவரிகள், சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விசாரணையின் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here