சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பாக நேர்மையான முறையில் விசாரணை நடைபெற ஜனாதிபதியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா விசாரித்து வந்தார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் அமித் ஷா ஆவார்.

இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்து வந்த சிபிஐ நீதிபதி லோயா, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி அதிகாலை மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கடந்த நவம்பரில் ’தி காரவன்’ இதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

loya-case

அந்தச் செய்தியில், மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மொஹித் ஷா, நீதிபதி லோயாவிடம் சாதகமான தீர்ப்பு வழங்கினால் 100 கோடி ரூபாய் வரை தருவதாக பேசியதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், மேலும், லோயா அதிகாலை 5 மணிக்கு மரணமடைந்ததாக மருத்துவமனையிலிருந்து அவரது குடும்பத்துக்குத் தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் அவரது மரணம் காலை 6.15 மணிக்கு ஏற்பட்டதாக மருத்துவமனை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதகாவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

supreme-court-696x463 (1)

இதனையடுத்து, நீதிபதி லோயா மரணம் குறித்து வெளிப்படை மற்றும் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் டிஒய் சந்திரசூட் மற்றும் ஏஎம் கன்வில்கர் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் லோயா மரணம் தொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசு, போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், லோயா மரணம் தொடர்பான வழக்கில், உண்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில் மற்றும் திரினாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மூத்தத் தலைவர்களும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை வெள்ளிக்கிழமை (இன்று) நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

rahul

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் லோயா மரண விவகாரத்தில் சந்தேகம் எழுப்புகின்றனர். அதனால் இது தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.” என்றார். மேலும் அவர், இது தொடர்பாக 15 கட்சிகளைச் சேர்ந்த 115 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் அளித்ததாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்