ஹூவாவே நிறுவனத்தின் சப்-பிராண்ட் ‘ஹானர்’தனது புதிய மாடல் ‘ஹானர் 20 லைட்’ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

சீனாவுக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த மாடல் போனை ‘ஹானர் 20 லைட் சீனா’ என்றும் அழைக்கின்றனர்.

6.30 இன்ச்சில் ஃபுல் ஹெச்.டி- OLED டிஸ்பிளே, 1080 X 2400 பிக்ஸல் ரெசல்யூசன், 4ஜி.பி, 6ஜி.பி, 8 ஜி.பி ரேம்கள், 128 ஜி.பி மெமரி, 256 ஜி.பி வரை ஸ்டோரேஜை நீட்டித்துக்கொள்ளும் வசதியுடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போன்.

மேலும், 48 எம்பியில் மெயின் கேமரா, 8 எம்பி, 2 எம்பியில் அடுத்தடுத்து கேமராக்கள் என்று மொத்தமாக மூன்று பின்புற கேமராக்கள், செல்ஃபி எடுக்க தனியாக 16 எம்பியில் ஒரு கேமரா என அசத்துகிறது இந்த ‘ஹானர் 20 லைட்’.

 நாள் முழுக்க சார்ஜ் நிற்க 4000எம்.ஏ.ஹெச். திறன்  கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன்விலை ரூ.14 ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here