சிறந்த கேமரா அம்சங்கள் கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை ஆரம்பம்

Vivo V20 is now available for purchase in India. The latest offering from the company in its V series, Vivo V20 was launched in the country last week.

0
145

விவோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த வி20 ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கியது.

புதிய விவோ வி20, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் உடன் இந்தியாவில் வெளியான முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

புதிய விவோ வி20 ஸ்மார்ட்போன் 44 எம்பி செல்பி கேமரா, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங், 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. 

vivo-v20-image-1602489106407

விவோ வி20 சிறப்பம்சங்கள்:

 • 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080×2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
 • குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
 • 8 ஜிபி ரேம்- 128 ஜிபி மெமரி
 • மெமரியை நீட்டிக்கும் வசதி
 • ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
 • 64 எம்பி பிரைமரி கேமரா
 • 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
 • 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ்
 • 44 எம்பி பிரைமரி கேமரா
 • 4000 எம்ஏஹெச் பேட்டரி
 • 33 வாட் பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
 • டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.1
 • யுஎஸ்பி டைப் சி
 • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

இது மிட்னைட் ஜாஸ், மூன்லைட் சொனாட்டா மற்றும் சன்செட் மெலடி என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இருவித மெமரி ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. 

இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 24,990 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 27,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் விவோ வி20 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் விவோ ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் மட்டுமின்றி முன்னணி ஆப்லைன் விற்பனையகங்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here