மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவன பட்டியல்கள் வெளியிடப்படும். இந்த பட்டியலில் இடம்பெற, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பல கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில், சிறந்த கல்வி நிறுவனத்துக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இது தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவரிசையில் இடம்பெற 5,805 கல்லூரிகள் விண்ணப்பித்து இருந்தது.

பல சோதனைகளை கடந்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப்போன்று கர்நாடகாவில் உள்ள ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர் ஐஐடி மற்றும் மூன்றாவது இடத்தில் டெல்லி ஐஐடி பெற்றுள்ளது.

சென்னை ஐஐடியில் பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொண்டு இருந்ததன் காரணமாக, சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here