கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகை இலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும்.

இந்தக் கறிவேப்பிலை புதர்ச்செடி அல்லது குறு மரம் வகையைச் சேர்ந்தது. தண்டு மற்றும் கிளைகளின் இடையில் கறிவேப்பிலை இலைகள்கொத்தாக வளர்கின்றன. இதன் பூக்கள் வெண்மை நிறத்திலும் பழங்கள் கருப்பு நிறத்திலும் உள்ளன. இந்தக் கறிவேப்பிலை பார்ப்பதற்கு சிறியத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாலும் இவற்றில் புதைந்துள்ள நன்மைகள் ஏராளம்.

கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. இதன் சுவை சற்றுக் காரத்துடன் கலந்த கசப்புத் தன்மையைக் கொண்டிருக்கும். ஆனால் நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை நம் உணவுகளில் ஒரு பகுதியாக மட்டுமே சேர்க்கின்றோம்.

ஒருமுறை நட்டு வைத்தால் அதன் பழங்கள் பழுத்துக் கீழே விழுவதினால் எண்ணற்ற செடிகள் வளர்ந்து விடுகின்றன. கறிவேப்பிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஏராளமாகப் பயிர் செய்யப்படுகிறது.

கறிவேப்பிலையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நாட்டுக் கறிவேப்பிலை மற்றொன்று காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகின்றன.

தமிழ்ச் சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கருவேப்பிலை. நம்மைப் போன்ற இன்றய தலைமுறையினர் அனைவரும் உணவின் நறுமணத்திற்காகக் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர் என்ற தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில் சேர்த்து வந்துள்ளனர். கறிவேப்பிலையில் கீழ் காணும் 12 விதமான மருத்துவ பயன்கள் உள்ளன.

1) இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது.
2) வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது.
3) குமட்டல் மற்றும் தலைச் சுற்றுக்குத் தீர்வு.
4) சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.
5) வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது.
6) 7) கண் பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது.
8) கல்லீரலைப் பாதுகாக்கிறது.
9) கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது. நோய் மற்றும் இத நோய்களிலிருந்து தடுக்கும் நல்ல கொழுப்பின் உற்பத்தி அளவை அதிகப்படுத்துகிறது.
10) முடியை வலுவாக்குகிறது.
11) நீரிழிவு நோய்க்குத் தீர்வு கிடைக்கிறது.
12) செரிமான மண்டலத்திற்கு நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here