சிறந்த அம்சங்களுடன் வெளிவரும் மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் பென்சிலில்

0
122

அடுத்த தலைமுறை பென்சில் சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.

இந்த விபரங்கள் அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமை விண்ணப்பத்தில் மூலமாகத் தெரியவந்துள்ளது.

மூன்றாம் தலைமுறை ஆப்பிள் பென்சிலில் மேம்பட்ட ஜெஸ்ட்யூர்கள்(gesture) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது பயனர் பென்சிலை பிடித்திருக்கும் விதத்தை கொண்டு அம்சங்களை இயக்க வழி செய்யும் என தெரிகிறது.

ஸ்டைலசில் வளையும் தன்மையில் டச் சென்சிட்டிவ் பகுதி இருப்பாக காப்புரிமை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயனரின் விரல் நுனி அப்பகுதியில் பதியும் தன்மைக்கு ஏற்ப பல்வேறு ஜெஸ்ட்யூர்களை புரிந்து கொள்ளும்.

மேலும் ஆப்பிள் பென்சிலில் கேமரா ஒன்று வழங்கப்படுவதாகவும் இதை பயன்படுத்தும் போது வெவ்வேறு பகுதிகளை ஐபேட் திரையில் ஒளிபரப்பும் பணியை செய்யும்.

இத்துடன் முக்கியமாக ஆப்பிள் பென்சிலில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது சாதனத்தை அன்லாக் செய்வதில் துவங்கி ஆப்பிள் பே சேவைக்கு பயோமெட்ரிக் விவரங்களை உறுதிப்படுத்தும். முன்னதாக 2018 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் பென்சில் 2 சாதனத்தை அப்டேட் செய்தது.

மற்ற ஸ்டைலஸ் சாதனங்களை போன்று ஆப்பிள் பென்சில் 2 கொண்டு வாடிக்கையாளர்கள் குறிப்புகளை எடுத்தல், திரையில் எழுதுவது, யூசர் இன்டர்ஃபேசில் நேவிகேட் செய்யலாம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here