சிரிப்பை அடக்க முடியவில்லை; இளம்பெண்ணை வேவு பார்த்த அமித்ஷாவை யார் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவுக்கு தலைவராக்கியது?

1
870

2013 ஆம் ஆண்டு , உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசு அதிகாரிகளை பயன்படுத்தி ஒரு இளம் பெண்ணை சட்டத்துக்கு புறம்பாக வேவு பார்த்தக் குற்றச்சாட்டுக்கு ஆளானவர். 

புதன்கிழமை , உள்துறை அமைச்சர் அமித் ஷா பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவுக்கு தலைவராகியுள்ளார் என்ற செய்தி பலரை வியப்பில் ஆழ்த்தியது.  

2013 ஆம் ஆண்டு அமித் ஷா  குஜராத் மாநிலத்தில் அமைச்சராக இருந்தபோது, அரசு அதிகாரிகளைப் பயன்படுத்தி ஒரு இளம் பெண்ணை தனது ‘சாகேப்’-க்காக சட்டத்துக்கு புறம்பாக கண்காணித்ததாக அமித் ஷா மீது குற்றம்சாட்டு எழுந்தது. அதுகுறித்த தொலைபேசி உரையாடல்களையும் கோப்ரா போஸ்ட் இணையதளம் வெளியிட்டிருந்தது.

[அந்த ‘சாகேப் ‘ அப்போதைய குஜராத் முதலமைச்சர் மோடிதான் என்றும் பல ஊடகங்கள் பேசிக் கொண்டன. ஏனென்றால் மோடியின் வலது கரமாக செயல்பட்டவர் அமித்ஷா]

இளம்பெண்ணை சட்டத்துக்கு புறம்பாக கண்காணித்த விவகாரம் வெளி வந்தவுடன் அந்தப் பெண்ணின் தந்தை தனது பெண்ணிற்குப் பாதுகாப்புக் கொடுக்கக் கோரி நரேந்திர மோடியிடம் கேட்டுக் கொண்டதாக கூறியது பாஜக. அதனாலேயே அப்பெண்ணை அரசு நிர்வாகத்தின் உதவியுடன் கண்காணித்ததாக பாஜக கூறியது .

 இளம் பெண்ணை கண்காணித்த விவகாரம் பெண்களின் உரிமைக்கு எதிரானது என்றும் கண்காணித்த விவகாரம் தங்களுக்கு தெரியாது என்றும் குஜராத் போலீஸ் அப்போது கூறியது.  

 இந்த  விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இவ்விவகாரம் பற்றி யாரும் பேசவில்லை 

உள்துறை அமைச்சர் அமித் ஷா பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவுக்கு தலைவராகியுள்ளார் என்ற செய்தி பலருக்கு நெருடலாக இருக்கவே பலர்   டிவிட்டரில் விமர்சனத்தை பதிவிட்டிருந்தனர்.  

சல்மான் கான் ஓட்டுனர் பயற்சி பள்ளிக்கு தலைவராகவும், சஞ்சய் தத் போதை மறுவாழ்வு மையத்துக்கு தலைவராகவும் நியமிக்கப்பட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அமித் ஷா பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவுக்கு தலைவராகியுள்ளதும் என்று பதிவிட்டுள்ளார் @presidentVerde

குஜராத்தில் நடந்த கலவரங்களை பற்றி எழுதிய பிரபல பத்திரிகையாளர் ரானா அயூப் HuffPost India –

இதழிடம் பேசுகையில் அமித் ஷா பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவுக்கு தலைவர் என்ற செய்தியை படித்தவுடன் நான் சிரித்துவிட்டேன் என்றார். மேலும் அமித் ஷா ஒரு இளம்பெண்ணை சட்டத்துக்கு புறம்பாக கண்காணித்ததில் குற்றம் சாட்டப்பட்டவர் அவர் எவ்வாறு பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவுக்கு தலைவராக முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் பேசியிருக்கும் ரானா அயூப் பெண்களுக்கு எதிராக செயல்பட்டதற்கு அமித் ஷா மீது அந்த ஒரு குற்றச்சாட்டு மட்டுமில்லை . சொராபுதீனின் மனைவி கவுசர் பீ மர்மமான முறையில் கொல்லப்பட்டதற்கும் ,   சொராபுதீன் போலி மோதலில் கொல்லப்பட்டதற்கும் தொடர்புடையவர் அமித் ஷா;  அவர் அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 22 குற்றவாளிகளுடன் பின்பு விடுவிக்கப்பட்டார்  என்பதையும் நினைவுகூர்ந்தார். 

பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவுக்கு அமித் ஷாவை தலைவராக நியமித்திருப்பதன் மூலம் பெண்கள் உரிமைகள் குறித்து அரசுக்கு கொஞ்சமும் அக்கறையில்லை என்பதைக் காட்டுகிறது. பொது உரிமைகளை அவமதிப்பவர் அமித் ஷா ; இஸ்லாமியர்கள் மீது  வெறுப்பைக் கொண்டவர் அமித் ஷா ; அவர்  இந்தக் குழுவுக்கு  தலைமை வகிப்பதால், எந்தப் பெண்ணும் இந்தக் குழுவை நம்பிக்கையோடு அணுக மாட்டார்கள் என்று HuffPost India – இதழிடம் கூறியுள்ளார் ரானா அயூப்.

பத்திரிகையாளர் சந்தியா மேனன் நான் ஒன்றை  நினைவூட்டுகிறேன் ,  தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இளம் பெண்ணை சட்டத்துக்கு புறம்பாக கண்காணித்தவர், பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழுவின் தலைவராகியிருக்கிறார் என பதிவிட்டுள்ளார். 

இந்தியாவில் துன்பப்பட்டுவந்த பெண்களுக்கு சரியான நிவாரணம் கிடைத்திருக்கிறது. அமித் ஷா இனி அவர்களுடைய பாதுகாப்புக்காக போலீஸை  நியமிப்பார் என கிண்டலாக பதிவிட்டுள்ளார் மன்தீப் சிங் பஜ்வா.

குஜராத் கலவரங்கள் குறித்து    Anatomy of Hate   

என்ற புத்தகத்தை எழுதியுள்ள மற்றொரு பத்திரிகையாளர் ரேவதி லால், பெண் அமைச்சர்கள் இருக்க ஏன் ஒரு ஆணை இந்தக் குழுவின் தலைவராக நியமித்திருக்கிறது அரசு என கேள்வி எழுப்புகிறார்.  கடந்த ஆட்சியில் MeToo க்காக  அமைக்கப்பட்ட அமைச்சரவைக் குழு எந்தவித செயல்பாட்டிலும் ஈடுபடாமல் தேர்தலுக்கு பிறகு கலைக்கப்பட்டது. அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் MeToo க்காக பெண்கள் அமைத்திருந்த இயக்கங்களை தொடர்பு கொண்டார்களா? அல்லது பாதிக்கப்பட பெண்கள் யாரையாவது தொடர்புக் கொண்டு பேசினார்களா? அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அந்த அமைச்சர்கள் கேட்டார்களா? என்று கேள்வி எழுப்பினார். 

அரசுக்கு பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகள் குறித்து எந்தவித அக்கறையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது எனவும் ரேவதி கூறியுள்ளார்

நம் நாட்டில்  ஏராளமான சட்டங்கள் உள்ளன. புதிய சட்டங்கள் எதுவும் தேவையில்லை. அதுமட்டுமில்லாமல்  நிர்வாகத்தில் கேட்கும் திறன் பெற்றவர் அல்ல அமித் ஷா.   MeToo இயக்கம் என்பது பெண்களின் பிரச்சினைகளை காது கொடுத்துக் கேட்பதாகும். அவர்கள் எந்தப் பெண்ணின் பிரச்சினையாவது கேட்டிருக்கிறார்களா? அவர்களுக்கு என்ன வேண்டும் என கேட்டிருக்கிறார்களா?எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்  ரேவதி லால். 

huffingtonpost.in

1 COMMENT

 1. First of all I want to say superb blog! I had a quick question that I’d like to ask if you do not mind.
  I was curious to find out how you center yourself and clear your head prior to writing.
  I’ve had trouble clearing my thoughts in getting my thoughts out there.
  I truly do take pleasure in writing but it just seems like the first 10
  to 15 minutes are usually wasted just trying to figure out how to begin. Any ideas or hints?
  Many thanks!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here