சிரஞ்சீவி படத்தில் நடிக்க மறுத்தாரா சாய்பல்லவி?

0
149

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர்  ’பிரேமம்’ மலையாள படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

தற்போதுள்ள நிலையில் தெலுங்கில் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கும் சாய் பல்லவி, தற்போது ராணா நடிக்கும் விராட பர்வம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அடுத்து நானியுடன் மீண்டும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்தநிலையில் சிரஞ்சீவி படத்தில் நடிக்க சாய் பல்லவிக்கு அழைப்பு வந்துள்ளதாம்.

சிரஞ்சீவி தற்போது கொரட்டாலா சிவா டைரக்சனில் நடித்துவரும் படம் ஆச்சார்யா. இதில் ஏற்கனவே காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் நிலையில், நக்சலைட் கதாபாத்திரத்தில்,  ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதற்குத்தான் சாய்பல்லவியை அனுக்கியுள்ளார்களாம்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாதி முடிவடைந்துள்ள நிலையில் சாய்பல்லவி தரப்பில் இருந்து இன்னும் எந்த பதிலும் சொல்லப்படவில்லையாம்.

காரணம் விராட பருவம் படத்திலும் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதால் தான் இந்த வாய்ப்பை ஏற்க சாய்பல்லவி தயங்குகிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here