வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனையால் உலக நாடுகள் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வந்தன.தடையை மீறி, அணு ஆயுத சோதனை,ஹைட்ரஜன் குண்டு சோதனை என செய்யப் பட்ட பல்வேறு சோதனைகளால் உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளானது.

இதையடுத்து ஐ.நா சபை, அமெரிக்க உள்ளிட்டவை வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தது. இதன் காரணமாக கொரிய தீபகற்பம் பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியது. ஆகவே தென்கொரியாவிற்கு பலம் சேர்க்கும் வகையில் அமெரிக்க ராணுவத்தினர் செயல்பட்டனர். இருநாடுகளும் இணைந்து, பல்வேறு ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டன.

எதிர்பாராத திருப்பமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் கடந்த 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. வரலாற்று சிறப்புமிக்க இச் சந்திப்பால் இருநாடுகளுக்கு இடையே இருந்து வந்த மோதல் போக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

NGIESUZU3JLWNJUF7VCNNLOXT4
. யு.எஸ் ஃபோர்சஸ் கொரியா (USFK) வின் புதிய தலைமையகம், கேம்ப் ஹம்ப்ரீஸ், பயோங்டேக், தென் கொரியா.

AAzjSFq

இந்நிலையில் சியோல் நகரின் தெற்கு பகுதியில் அமெரிக்க ராணுவம் புதிய தலைமையகத்தை உருவாக்கியுள்ளதையடுத்து கடந்த 1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது தென்கொரிய தலைநகரான சியோலில் உருவாக்கப்பட்டு இருந்த ராணுவ முகாமை அமெரிக்கா காலி செய்துள்ளது.

இந்த ராணுவ முகாம் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வெற்றி பெற்ற பின், தென்கொரியா, அமெரிக்கா இடையேயான நட்புறவால் தொடர்ந்து நீடித்து வந்தது. இதன்மூலம் தென்கொரியாவின் சியோல் நகரில் கடந்த 70 ஆண்டு காலமாக செயல்பட்டுவந்த அமெரிக்க ராணுவத்தினரின் செயல்பாடு முடிவுக்கு வந்துள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here