சிம்பு : மிஷ்கின் : ஸ்ருதிஹாசன் : வடிவேலு?

0
154

நடிகர் சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே கூட்டணி இன்னொரு படத்திலும் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநாடு படத்திற்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக நீண்ட காலமாகவே ஒரு தகவல் ஒன்று கசிந்து வருகிறது. குறைந்த நாட்கள் கால்சீட் மட்டுமே தேவைப்படும் அந்த படத்தில் சிம்பு நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.

இது பற்றி இருதரப்புமே இன்னமும் உறுதி செய்யாத நிலையில், இந்தப் படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படத்தில் முதல் முறையாக சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு, கடைசியாக “வந்தா ராஜாவா தான் வருவேன்” என்ற சுந்தர்.சி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here