சிம்பு படத்தை இயக்கும் சரண்…?

0
274
Simbu

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சேதாரமான சிம்புவை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் நடுங்குகிறார்கள். மூன்று மாதத்தில் படத்தில் நடித்து முடித்துவிடுவேன் என்று சிம்புவிடம் சத்தியம் வாங்கி தனது படத்தில் கமிட் செய்திருக்கிறார் மணிரத்னம். அவரளவுக்கு தைரியம் வேறு யாருக்கும் இல்லை.

இந்நிலையில் கோடம்பாக்கத்தில் புதிய தகவல் ஒன்று அலையடிக்கிறது. காதல் மன்னன், அமர்க்களம், வசூல்ராஜா, அசல் உள்பட பல படங்களை இயக்கிய சரண் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்பதே அந்தத் தகவல்.

தொடர் தோல்விகளை அளித்த சரண் கடைசியாக வினய் நடிப்பில் செவத்த காளை செந்தட்டிக்காள என்ற படத்தை இயக்கினார். படம் வெளியாக பல வருடங்கள் எடுத்துக் கொள்ள, அதே படத்தை ஆயிரத்தில் இருவர் என்ற பெயரில் வெளியிட்டனர். படம் இரண்டரை ஷோ ஓடியது.

இந்நிலையில் அவர் சிம்புவை இயக்குவதாக தகவல் வருகிறது. அனைத்தும் மைனஸில் போய்க்கொண்டிருக்கும் சிம்பு ஒருவேளை சரணுக்கு பிளஸ்ஸாக அமையலாம், வாழ்த்துகள்.

இதையும் படியுங்கள்: கோடிக்கணக்கான வணிகர்களைப் பாதிக்கும் அந்நிய நேரடி முதலீட்டு முடிவைத் திரும்பப் பெற வேண்டும்’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்