சிம்புவுடன் திருமணமா?: சுபிக்ஷா

Simbu, who was last seen on screen in Sundar C’s ‘Vantha Rajavathaan Varuven’ is expected to commence work on his upcoming political-thriller ‘Maanaadu,’ directed by Venkat Prabhu soon.

0
481

நடிகர் சிம்புவுடன் திருமணம் நடக்க உள்ளதாக வெளியான தகவலை, நடிகை சுபிக்ஷா மறுத்துள்ளார்.

டி.ராஜேந்தர் தம்பதியினர் தங்கள் மகன் சிம்புவுக்கு பெண் பார்க்கும் படலத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். சிம்புவுக்கு ஏற்பட்டுள்ள எல்லா பிரச்னைகளுக்கும், திருமணம் தான் நல்ல தீர்வாக அமையும் என அவர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் அன்னக்கொடி படம் வாயிலாக தமிழில் அறிமுகமான நடிகை சுபிக்ஷாவுக்கும் சிம்புவுக்கும் திருமணபேச்சு நடைபெற்று வருவதாக கோடம்பாக்கம் முழுவதும் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. இந்நிலையில், சிம்பு பங்கேற்ற விருந்துகளில் சுபிக்ஷாவும் ஆஜரானார்.

இது குறித்து சுபிக்ஷா சமீபத்தில்பேசியபோது,‘சிம்பு மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு. அவர், நண்பர்களுக்கு மரியாதை அளிப்பவர். தொழில் ரீதியாக நாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம். எங்கள் இருவருக்கும் திருமண பேச்சு நடக்கிறது என்பதில் உண்மையில்லை. சமீபத்தில் சிம்பு உடன் ஒன்றிரண்டு விருந்தில் பங்கேற்றேன், அதை வைத்து தவறாக சித்தரிக்கின்றனர். நாங்கள் தொழில் ரீதியாக இன்னும் நிறைய பயணிக்க வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் சிம்பு படத்தில் நடிப்பேன் என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here