சிபிஐ இயக்குநர் நியமனத்துக்கு எதிரான வழக்கு: ‘அவர் மகள் திருமணத்துக்கு சென்றேன்’ ; 3-வது நீதிபதி விலகல்

0
402

சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் நியமனத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற அமர்வில் இருந்து மேலும் ஒரு நீதிபதி விலகி உள்ளார்.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா, அப்பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் கடந்த 10ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து ‘காமன் காஸ்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனிடையே இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கடந்த 21ஆம் தேதி விலகினார்.

அப்போது அவர், சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் உயர்நிலைக் குழுவில் தாம் உறுப்பினராக இருப்பதால், இந்த வழக்கை விசாரிக்க இயலாது என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக நீதிபதி ஏ.கே. சிக்ரி இந்த வழக்கை விசாரிப்பார் என கூறப்பட்டது. ஆனால் நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து அவரும் கடந்த வாரம் விலகினார்.

இந்நிலையில் இந்த வழக்கு வேறொரு நீதிபதியின் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசாரணை நடத்தும் அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி என்.வி. ரமணாவும் திடீரெனெ விலகியுள்ளார். எனவே, இந்த வழக்கில், விசாரணையை தொடங்குவதில் இழுபறி நீடிக்கிறது. இதுவரை தலைமை நீதிபதி உள்பட 3 பேர் இந்த வழக்கிலிருந்து விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலகிய நீதிபதி நீதிபதி என்.வி. ரமணா கூறிய காரணம் என்னவெனில் நாகேஸ்வர ராவ் தன்னுடைய சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் தொடர்பான வழக்கைத் தான் விசாரிப்பது பொருத்தமாக இருக்காது. மேலும், தன்னுடைய மகளின் திருமணத்திலும் நாகேஸ்வர ராவ் பங்கேற்றுள்ளார் என்பதால், தன்னால் வழக்கை விசாரிக்க இயலாது. ஆதலால், விலகுகிறேன். இந்த வழக்கைத் தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்பி வைக்கிறேன். அவர்கள் எந்த அமர்வு விசாரிக்கும் என்பதை இறுதி செய்வார்கள் ” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here