சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ரஃபேல் ஊழலைப் பற்றிய விசாரணையைத் தொடங்க இருந்தார், அதனால்தான் மோடியால் நீக்கப்பட்டாரா? அர்விந்த் கெஜ்ரிவால்

கடைசியில் நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்பின் மீது கைவைத்து அதன் சுதந்திரத் தன்மையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது மத்தியில் ஆளும் பாஜக அரசு என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

சிபிஐ இயக்குர் அலோக் வர்மா, இணை இயக்குநர் அஸ்தானா ஆகியோருக்கு இடையிலான பனிப்போர் வெளியே வந்ததையடுத்து, இருவரையும் கட்டாய விடுப்பில் செல்லுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், புதிதாக சிபிஐ இயக்குநராக நாகேஸ்வரராவை நியமித்தது. இது குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில்

சிபிஐ இயக்குநரை விடுமுறையில் போகச் சொல்ல என்ன காரணம். லோக்பால் சட்டப்படி நியமிக்கப்பட்ட, சிபிஐ அமைப்பின் தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, மோடி அரசுக்கு எந்தச் சட்டம் அதிகாரம் கொடுத்தது. எதை மறைக்க மோடி அரசு முயற்சிக்கிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அர்விந்த் கெஜ்ரிவால் அவரது மற்றொரு டிவீட்டில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மத்திய மோடி அரசால் நீக்கப்பட்டதற்கும், ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குக்கும் சம்பந்தம் இருக்கிறதா? அலோக் வர்மா ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்த ஊழலைப் பற்றிய விசாரணையைத் தொடங்க இருந்தார். அது மோடிக்கு பிரச்சனையாகிவிட்டதா? என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here