சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு அளித்தது சட்டத்துக்கு புறம்பானது என்று மக்களவை எதிர்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே உச்ச நீதிமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) வழக்கு தொடுத்துள்ளார்.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தனர்.

இதையடுத்து அக்டோபர் 24-ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணியளவில் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானாவுக்கு கட்டாய விடுப்பு அளித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. சிபிஐ-யின் இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். 55 வருட சிபிஐ வரலாற்றில் சிபிஐ இயக்குநர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கபடுவது, அதுவும் நள்ளிரவு அளித்தது அரசியல் வட்டாரங்களில் மிகப் பெரிய கவனத்தை ஈர்த்தது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது சட்டத்துக்கு புறம்பானது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 3 பேர் கொண்ட குழு மட்டுமே சிபிஐ இயக்குநரை நியமிப்பது அல்லது நீக்குவது தொடர்பான முடிவை எடுக்கமுடியும். அதேசமயம், சிபிஐ இயக்குநருக்கு எதிராக செயல்படும் அதிகாரம் மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுவுக்கு கிடையாது என்று அவர் தாக்கல் செய்த மனுவில்
குறிப்பிட்டுள்ளார்.

சிபிஐ-க்கு வழங்கப்பட்ட இந்த கட்டாய விடுப்பு சட்டத்துக்கு புறம்பான, நியாயமற்ற, தண்டனைக்குரிய செயலாகும் என்று மல்லிகார்ஜூன் கார்கே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here