பிரதமர் மோடி தினமும் சிபிஐ, அமலாக்கத்துறையினர் மூலம் எதிர்க்கட்சியினரை மிரட்டி வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை அருகேயுள்ள, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில், சனிக்கிழமை (இன்று) காலை அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

randeep

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா, எதிர்க்கட்சியினரைப் பழிவாங்குவதற்காகவே பிரதமர் மோடி மற்றும் அரசு, தினமும் சிபிஐ, அமலாக்கத்துறையினரை ஒரு பொம்மையைப்போல் பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.

chidambaram

மேலும் இந்தச் சோதனை குறித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அமலாக்கத்துறையின் இந்தச் சோதனை திட்டமிட்ட நாடகம் என்றும், இந்த நாடகத்தை ஏற்கனவே தான் எதிர்பார்த்திருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், இந்த சோதனையில் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்