(இந்தச் செய்தி அக்டோபர் 26, 2018 அன்று வெளியானது. மறுபிரசுரமாகிறது)

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும் , சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் இருந்ததால், இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக சிபிஐ இயக்குநராக நியமித்தது மோடி அரசு. அதிகாலை 2 மணிக்கு இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது . அலோக் வர்மாவும், ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். ராகேஷ் அஸ்தானா மோடிக்கு மிகவும் பிடித்தமானவர், நெருக்கமானவர் . குஜராத் வடோதராவில் 2016 ஆம் ஆண்டு நடந்த ராகேஷ் அஸ்தானாவின் மகள் திருமணம் சிபிஐயின் விசாரணை வளையத்துக்குள் வந்திருக்கிறது.

ராகேஷ் அஸ்தானா தனது மகளின் திருமணத்திற்காக பல்வேறு சேவைகளைப் இலவசமாக பயன்படுத்திக் கொண்டார், குறிப்பாக குஜராத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் ரூ.5,000 கோடி வங்கி நிதி மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் ராகேஷ் அஸ்தானா மீதும் புகார் எழுந்தது. ஸ்டெர்லிங் பயோடெக்கின் உரிமையாளரின் பண்ணை வீடு ராகேஷ் அஸ்தானாவின் மகளின் திருமண சடங்குகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 2016 இல் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் மீது எந்த வங்கி மோசடி புகாரும் எழுப்படவில்லை.

இதுமட்டுமல்லாமல் ராகேஷ் அஸ்தானாவின் தகுதிக்கு மீறி திருமணத்திற்கு ஆடம்பரமாக செலவுகள் செய்துள்ளார். இது தொடர்பான ஆவணங்கள் சிபிஐ வசம் இருக்கின்றன , மேலும் இந்தியாடுடே செய்தி சேனல் வசமும் இருக்கின்றன.

அஸ்தானாவின் மகள் திருமணத்துக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது .

அஸ்தானாவின் மகள் திருமணம் 2016 நவம்பர், 24, 25 தேதிகளில் குஜராத் வடோதராவில் நடைபெற்றது. ராகேஷ் அஸ்தானா 2008 லிருந்து 2011 வரை வடோதராவில் கமிஷனராக பொறுப்பில் இருந்தார்.

2011 லிருந்து 2016 தொடக்க காலங்கள் வரை ராகேஷ் அஸ்தானா சூரத்தில் கமிஷனராக பொறுப்பில் இருந்தார். அவருடைய மகள் திருமணத்தின்போது அவர் சிபிஐயின் சிறப்பு இயக்குநராக இருந்தார்.

ராகேஷ் அஸ்தானாவின் திருமணம் தொடர்பாக பல ஆவணங்கள் சிபிஐ விசாரணையில் கிடைத்துள்ளது.

4

திருமண சடங்குகள்

*2016, நவம்பர் 24 ஆம் தேதி நடந்த திருமண சடங்குகள் தொடர்பாக 2 ஆவணங்கள் உள்ளன.

*குஜராத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் ரூ.5,000 கோடி வங்கி நிதி மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் ராகேஷ் அஸ்தானா மீதும் புகார் எழுந்தது. ஸ்டெர்லிங் பயோடெக்கின் உரிமையாளரின் பண்ணை வீடு ராகேஷ் அஸ்தானாவின் மகளின் திருமண சடங்குகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த பண்ணை வீடு ஸ்டெர்லிங் பயோடெக்கின் உரிமையாளர் சேத்தன் சந்தேசராவுக்கு சொந்தமானது.

*இந்த நிகழ்வின்போது உணவு பரிமாறுதலை ஹோட்டல் எக்ஸ்பிரஸ் டவர்ஸ் வழங்கியது, இந்த ஹோட்டல் அதன் சேவைகளுக்காக ஒரு பைசா கூட வசூலிக்கவில்லை.

*நாங்கள் உணவு மட்டும்தான் கொடுத்தோம். இலவசமாக செய்ததால் அதற்கு நாங்கள் பில் கொடுக்கவில்லை என்று அந்த ஹோட்டல் நிர்வாகம் சிபிஐ – டம் விளக்கம் அளித்துள்ளது.

திருமணம் நடந்த இடம்

*திருமணம் லக்‌ஷ்மி விலாஸ் பேலஸ் ஹோட்டலில் நிகழ்ந்தது. இது கெய்க்வாட் அரச குடும்பத்தின் வீடாக (அரண்மனையாக ) இருந்தது .

*லக்‌ஷ்மி விலாஸ் பேலஸும் ராகேஷ் அஸ்தானாவின் மகள் திருமணத்துக்கு இலவசமாக செய்ததாக சிபிஐ யிடம் தெரிவித்துள்ளது.

திருமணம் நடைபெற்ற லக்‌ஷ்மி விலாஸ் பேலஸ்
திருமணம் நடைபெற்ற லக்‌ஷ்மி விலாஸ் பேலஸ்

*மற்றொரு ஆவணம் திருமணத்துக்கு பயன்படுத்திய ஹோட்டல் அறைகள் மற்றும் பயணங்கள் குறித்துக் கூறுகிறது. அந்த ஆவணத்தில் தி சன் சிட்டி க்ளப் அன்ட் ரிசார்ட் அஸதானாவின் குடும்பத்தினருக்கு 35 அறைகளை இலவசமாக அளித்துள்ளது. எங்களுடைய ரிசார்ட் புதிது என்பதாலும் ராகேஷ் அஸ்தானா மாதிரியான மதிப்புக்குரியவர்களுக்கு எங்கள் ரிசார்ட்டை கொடுப்பதில் பெருமை என்பதாலும் இலவசமாக வழங்கினோம் என்று சிபிஐயிடம் சன் சிட்டி க்ளப் அன்ட் ரிசார்ட் தெரிவித்துள்ளது.

மற்றுமொரு ஆவணம் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கு ஹோட்டல் எக்ஸ்பிரஸ் டவர்ஸ் 19 அறைகளை ரூ175க்கு வாடகைக்கு கொடுத்திருக்கிறது. அதே நேரம் மற்றவர்களுக்கு அந்த அறைகளை ரூ2900 முதல் ரூ3200 க்கு வாடகைக்கு கொடுத்திருக்கிறது ஹோட்டல் எக்ஸ்பிரஸ் டவர்ஸ்.

மற்றுமொரு ஆவணம் திருமணத்தின்போது சாலை மற்றும் விமான பயணங்களுக்காக டிராவல் சொலூயஸன்ஸ் (Travel Solutions) என்ற நிறுவனத்தை பயன்படுத்தியது பற்றியது. இந்த சாலை மற்றும் விமான பயணங்களுக்கான செலவை ஸ்டெர்லிங் பயோடெக் செலுத்தியுள்ளது என்று சிபிஐ ஆவணம் தெரிவித்துள்ளது.

Courtesy : India Today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here