சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று(திங்கள்கிழமை, மே 06) வெளியிடப்பட்டது. 

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் இந்தத் தேர்வை 27 லட்சம் மாணவர்கள் எழுதினர். 

இந்நிலையில், தேர்வு முடிவுகள் www.cbse.nic.in, www.cbseresults.nic.in, xamresults.net,digilocker.gov.in  ஆகிய இணையதளங்களில் திங்கள்கிழமை (மே 06,2019) மதியம்2.30 மணியளவில் வெளியிடப்பட்டது. 

வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டில் ஒரு மாதம் முன்னதாகவே பொதுத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here