சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பெற்ற ஹரியானாவைச் சேர்ந்த 19 வயது மாணவியை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்று கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளது . சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்ததற்காக அந்த மாணவி, ஜனாதிபதி கையில் விருது வாங்கியுள்ளார்.

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அந்த மாணவி, பயிற்சி மையத்துக்கு சென்ற போது அவரை 3 பேர் கடத்தியுள்ளனர். கார் மூலம் பெண்ணைக் கடத்திய மர்ம நபர்கள், யாரும் இல்லாத இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பெண்ணை அழைத்துச் சென்ற இடத்தில், முன்னரே சிலர் காத்திருந்தனர் எனவும், அவர்கள் மாணவியை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துள்ளார்கள் எனவும் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

5

சுய நினைவு இழக்கும் வரையில் அந்த மாணவியை கொடூரமாகப் பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் பின்னர் அவரை பேருந்து நிறுத்தம் ஒன்றில் கீழே தள்ளிவிட்டு காரில் தப்பியோடி விட்டது. மயக்க நிலையில் இருந்த மாணவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்கார சம்வத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மணிஷ், நிஷூ மற்றும் பங்கஞ் மூன்று பேரின் புகைப்படத்தை அம்மாநில காவல்துறையினர் வெளியிட்டனர். அதில் பங்கஞ் என்பவர் ராணுவ வீரர்.

இந்தநிலையில் பாலியல் பலாத்காரத்தில் முக்கியக் குற்றவாளிகளில் 3 பேரில் ஒருவரை ஹரியானா போலீஸார் நிஷூ போகாட் என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. முன்னமே திட்டமிட்டு அந்த மாண்வி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது .

மாணவியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய திட்டம் வகுத்தது நிஷூ போகாட் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் தனக்குத் தெரிந்த தீன் தயாள் என்பவருக்குச் சொந்தமான வயலில் உள்ள அறையின் சாவியைப் பெற்றுள்ளார். பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து மாணவியைக் கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

10 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த மாணவியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து பயந்து போன நிஷூ டாக்டரை அழைத்துள்ளார். பின்னர் அந்த மாணவியைக் காரில் ஏற்றி பேருந்து நிலையத்தில் தள்ளி விட்டு ஓடி விட்டனர். டாக்டரும் இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதைத்தவிர தப்பியோடிய நிஷூவின் நண்பர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்