சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பெற்ற ஹரியானாவைச் சேர்ந்த 19 வயது மாணவியை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்று கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளது . சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்ததற்காக அந்த மாணவி, ஜனாதிபதி கையில் விருது வாங்கியுள்ளார்.

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அந்த மாணவி, பயிற்சி மையத்துக்கு சென்ற போது அவரை 3 பேர் கடத்தியுள்ளனர். கார் மூலம் பெண்ணைக் கடத்திய மர்ம நபர்கள், யாரும் இல்லாத இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது.

தன்னை பலாத்காரம் செய்தவர்கள் எல்லாம், தன் சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அந்தப் பெண் போலீஸிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, போலீஸ் அவர்களின் புகாரை ஏற்க மறுத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். இறுதியாக இந்த விவகாரம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் எங்கள் மகளுக்கு இந்த கதி நேர்ந்தது எப்படி. என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு போலீஸ் நிலையமாக புகார் அளிக்க அலைந்தோம் என்றும் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு ஹரியானா மாநில எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாலியல் பலாத்கார விவகாரத்தில் பாஜக அரசு மெத்தனத்துடன் செயல்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேந்தர் ஹூடா குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்