தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தை திரையுலகமும், ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மார்ச் 29 படம் திரைக்கு வரும் நிலையில், 18 வயதுக்கு குறைவான தியாகராஜன் குமாரராஜா ரசிகர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி காத்திருக்கிறது.

படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைக் காட்சிகள் மற்றும் வசனங்களை கருத்தில் கொண்டு படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கைக்குழு. அதனால், 18 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க அனுமதியில்லை. படம் 2.56 மணிநேரம் ஓடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம்.

சூப்பர் டீலக்ஸில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் இசை. நீரவ் ஷா, பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளனர். படத்தைப் பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப் படத்தை வியந்து பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/MoviesSingapore/status/1110008580256612352

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here