அருவி இயக்குநரின் புதிய படம் வாழ்

அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் அடுத்து இயக்கும் படத்துக்கு வாழ் என்று பெயர் வைத்துள்ளார். இந்தப் படத்தை சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. கலையரசு இணைதயாரிப்பு. கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மூன்றாவது தயாரிப்பாக இந்தப் படம் தயாராகிறது.

கன்னடத்தில் ரீமேக்காகும் அர்ஜுன் ரெட்டி

தெலுங்குப் படம் அர்ஜுன் ரெட்டி இந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் ரீமேக்காகி வசூலை அள்ளுகிறது. 5 நாளில் 100 கோடியை கடந்து 200 கோடி எல்லையை நோக்கி படம் பாய்கிறது. அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக் ஆதித்ய வர்மா விரைவில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து இப்படம் கன்னடத்திலும் ரீமேக் ஆகிறது. எஸ்.நாராயண் இதன் கன்னட ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார்.

புருவஅழகியின் புதிய இந்திப் படம்

ஒரேயொரு புருவ அசைப்பில் ஒட்டு மொத்த இந்தியாவையும் வீழ்த்தியவர் ப்ரியா வாரியர். அவர் நடித்த ஒரு அடார் லவ் தோல்வியடைந்தாலும் அவருக்கு மவுசு குறையவில்லை. இந்தியில் ஸ்ரீதேவியின் பங்களா என்ற படத்தில் நடித்தார். மறைந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படம் விமர்சிப்பதாக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கொடுத்த புகாரால் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில் ஹேக்கர்ஸ் என்ற புதிய இந்திப் படத்தில் நடிக்க ப்ரியா வாரியர் ஒப்பந்தமாகியுள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகரனின் கேப்மாரி

விஜய்யை ஸ்டாராக உருவாக்கியவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன். இதுவரை 74 படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் இயக்கியுள்ளார். நேற்று அவரது 75 வது படம் எளிமையான முறையில் தொடங்கியது. படத்துக்கு கேப்மாரி என்று பெயர் வைத்துள்ளனர். ஜெய், அதுல்யா ரவி நடிக்கின்றனர். ஜுலையில் முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஜான்வி கபூரின் அடுத்தப் படம்

தடாக் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். முதல் படத்திலேயே அனைவரது பாராட்டையும் பெற்றது அபூர்வ நிகழ்வு. ஜான்வி கபூரின் அடுத்தப் படம் குறித்து சின்ன இடைவெளிக்குப் பிறகு தகவல் வந்துள்ளது. தோஸ்தானா இரண்டாம் பாகத்தில் ஜான்வி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கார்த்திக் ஆரியன் நடிக்கிறார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here