இந்தியின் முக்கியமான நடிகர் நவாசுதின் சித்திக் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பேட்டயில் சிங்கார் சிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பேட்ட படத்தில் நடித்தவர்களின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். முதலில் விஜய் சேதுபதி. அவர் ஜித்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியின் மெயின் வில்லன். நேற்று நவாசுதின் சித்திக்கின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தினர். சிங்கார் சிங் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

பேட்ட படத்தின் மரண மாஸ் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாளை மேலுமொரு பாடலை வெளியிடுகின்றனர். ஒன்பதாம் தேதி பிற பாடல்கள் அனைத்தும் வெளியாகின்றன. பொங்கலுக்கு படம் ரிலீஸாகிறது.

பேட்ட படத்தின் புகைப்படங்கள், கதாபாத்திரப் பெயர்கள் எண்பதுகளின் கேங்ஸ்டர் படங்களை கிண்டல் செய்வது போல தோன்றுவது நமக்கு மட்டும்தானா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்