அனைத்திற்கும் துணிந்து தான் அரசியலுக்கு வந்துள்ளதாகவும், வன விலங்குகளுடன் வாழ்ந்துள்ளதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது வீட்டில் நண்டு விடும் போராட்டம் செய்கின்றனர்.

ஆனால் சிங்கம், புலி, கரடி, பல்லி, பூரான் ஆகியவற்றை பார்த்து விட்டு இங்கு வந்திருக்கிறேன் என்று கூறினார். வனத்துறை அமைச்சராக இருந்தபோது சிங்கம், புலியுடன் வாழ்ந்ததாகவும், அனைத்திற்கும் துணிந்து தான் அரசியலுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2002ல் வனத்துறை அமைச்சராக ஜெயக்குமார் இருந்தபோது, தேனியில் சிங்கம் மற்றும் புலியை பார்த்தார் என்று கூறினார். இதனால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here