சசிகுமார் நடிப்பில் தயாராகும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் அவருக்கு ஜோடியாக யாரை போடுவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது இப்போது தெரிய வந்துள்ளது.

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமார் நடித்து வருகிறார். பிரபாகரனின் முதல் படம் சுந்தரபாண்டியனில் சசிகுமார்தான் ஹீரோ. அடுத்து இயக்கிய கதிர்வேலன் காதல், சத்ரியன் இரண்டும் தோல்வியடைய மீண்டும் சசிகுமாருடன் இணைந்துள்ளார். அதேபோல் சசிகுமாரும் தோல்வி மேல் தோல்வி கண்டு பிரபாகரனுடன் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷை நாயகியாக போட்டால் சிறப்பாக இருக்கும் என்று அவரை அணுகினார். விஷால், விஜய் என்று முன்னோக்கி போய்க் கொண்டிருக்கும் அவருக்கு சசிகுமாருடன் ஜோடி சேர தயக்கம். கால்ஷீட் இல்லை என்று மறுத்திருக்கிறார். பிறகு நிக்கி கல்ராணியை ஒப்பந்தம் செய்யலாம் என முடிவு செய்தனர். நிக்கி கல்ராணியின் சமீபத்திய படங்கள் அவரை கவர்ச்சி நடிகை அளவுக்கு கீழிறக்கி காட்டியதால் அவர் கிராமத்து கதைக்கு ஒத்து வருவாரா என்ற சந்தேகம் எழ, அவரை மாற்றிவிட்டு மடோனா செபஸ்டினை ஒப்பந்தம் செய்துள்ளனர். அப்படி கீர்த்தி சுரேஷில் தொடங்கிய பணம் மடோனா செபஸ்டினில் வந்து முடிவடைந்திருக்கிறது.

சுந்தர பாண்டின் வெற்றி பெற்ற போது நயன்தாராவே பிரபாகரனின் படத்தில் நடிக்க தயங்கவில்லை. இரண்டு தோல்விகளுக்குப் பிறகு கீர்த்தி சுரேஷே கால்ஷீட் தர மறுக்கிறார்.

சிங்கம் சின்னதான சறுக்கினாலும் சிக்கல்தான்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்