சிக்கலில் வங்கிகள்: நாட்டு மக்களின் நம்பிக்கை அன்றாடம் சிதைந்து கொண்டிருக்கிறது: மத்திய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்

0
493

இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை பிரச்சினை இந்த அளவுக்கு உச்சத்தில் இருந்ததேயில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகும் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

”நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை இந்த அளவுக்கு உச்சத்தில் இருந்ததில்லை. பணவீக்கமும் இதுபோன்று கட்டுக்கு அடங்காமல் இருந்தது இல்லை.

நாட்டு மக்களின் நம்பிக்கை அன்றாடம் சிதைந்து கொண்டிருக்கிறது. சமூக நீதி நசுக்கப்படுகிறது. வங்கிகள் பிரச்சினையில் சிக்கியுள்ளன. நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதார வளர்ச்சியும் சிக்கலில் இருக்கிறது. வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்ன நடக்கிறது என்று தெரியவில்லை”.

இவ்வாறு ராகும் காந்தி தெரிவித்துள்ளார்.

தனியார் வங்கியான லக்‌ஷ்மி விலாஸ் வங்கி கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரூ. 25 ஆயிரத்திற்கு மேல் எடுக்க முடியாது என ஆர்பிஐ தெரிவித்தது.

இந்நிலையில் ராகும் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here